உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

மறைமலையம் -34 *

28

'உனற்கரி யனவாம் நுண்ணிய வாற்றல் உடைமையை உணராதே

உலகவர் நாளுங் கலகம் விளைத்தனர் உறுபயன் காண்கிலராய்க்

2கனக்க வுயர்ந்தினி வாய்த்த பிறப்புக் கழியச் செயலொழியக்

கருதிய வெல்லாங் கருதிய வாறே கண்டு சிறப்புறுவான் 3மனக்கவர்ச் சியெனும் 4அருமந் துறழும் மாட்சியின் உயர்கலைநூல்

மன்னுறு தமிழில் ஆக்கி வழங்கி மட்டறு புகழ்கொண்டோய்

5தனக்குத் தானே நிகராந் தமிழ்மகன்

தாலோ தாலேலோ!

தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. உனற்கரிய

உனற்கு +அரிய

சிந்தித்து உணர்வதற்கு

அரியதான.

2. கனக்க - மிகவும்; கனம் தமிழ்ச்சொல்லே.

3. மனக்கவர்ச்சி - அடிகளாரின் நூல் (மனிதவசியம்).

4. அருமந்து – அருமருந்து எனற்பாலது அருமந்து என நின்றது.

5. தனக்குத்... - (தனக்குப்பிறர்) நிகரிலாமை கூறியவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/277&oldid=1595166" இலிருந்து மீள்விக்கப்பட்டது