உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

29

அலைவுறு நெஞ்சக நினைவுகள் தம்மை அடக்கி முயன்றினிதே

ஆங்கதை யொருவழி வைத்தினி தாளும்

ஆற்றல் மிகப்பெற்றார்

தொலைவினில் உள்ளன நிகழ்வன கண்முன் தோன்றுங் காட்சியெனத்

தோற்ற மளித்திட உணர்தல் உணர்த்தல் 1தோமறு முறைகாட்டி

நிலைபெறு செந்தமிழ்க் கலைவளம் மேன்மேல் நீடிய 2 நூல்செய்தோய்

நெடிதே அடிமையின் எம்மவர் 3தாழ்தலை நிமிரச் செய்பணியில்

தலைமையின் ஓங்கிய பெருமையன் எந்தை தாலோ தாலேலோ!

தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ தாலேலோ!

குறிப்புரை :

1. தோம் – குற்றம்.

2.

நூல் ‘தொலைவிலுணர்தல்'

அடிகளாரின் நூல்.

3.

தாழ்தலை - வினைத்தொகை (இறந்தகாலம்).

253

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/278&oldid=1595167" இலிருந்து மீள்விக்கப்பட்டது