உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

4. சப்பாணிப் பருவம்

255

31

எங்குநிறை கின்றமை முதலாய 1வெண்குணத்(து) இறைவனைத் 2 தன்னியல்பில்

ஏற்றவழி பாடுகொடு சிற்றுயிர்கள் உய்யுமா(று) ன்மையால் அருளாளனின்

பொங்குநற் 3பொதுவியல்பு பற்றி யரு வுருவமாய்ப் பொலிதலும் அறியாவிருள்

போக்குபே ரொளியுடைமை யன்றியும் பற்றுறும் பொருளெலாந் தூய்மைசெயலும் செங்கதிர் நீலமென இருவண்ண முடைமையுஞ் சீர்த்தமுத்தொழில்செய்தலுஞ்

சீருற விளங்குஞ் சிறப்பியல் புடையநற் செந்தீயில் தென்னாட்டவர்4

தங்கள்சிவ பெருமானை நோக்கித் தொழுங்கையால் சப்பாணி கொட்டியருளே!

தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி கொட்டியருளே!

குறிப்புரை :

1.

எண்குணம் : (1) தன்வயத்தனாதல், (2) தூய உடம்பினனாதல், (3) இயற்கையுணர்வினனாதல் (4) முற்றுணர்தல், (5) இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், (6) பேரருளுடைமை (7) முடிவிலாற்றல் உடைமை, (8) வரம்பிலின்பம் உடைமை.

2,3. தன்னியல்பு இறைவனின் இருவகை நிலைகளுள் ஒன்று. இது சிறப்பியல்பாம். பிறிது பொதுவியல்பாம். இவையிற்றை வடநூலார் சொரூபநிலை, தடத்தநிலை என்ப.

4. 'தென்னாடுடைய சிவன்' - திருவாசகம்.

‘செந்தீப் பிழம்பு' இறைவன் இயல்புடன் ஒத்துள்ளமையை அடிகளார் தம் நூல்களின் பலவிடங்களில் விளக்கியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/280&oldid=1595169" இலிருந்து மீள்விக்கப்பட்டது