உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

மறைமலையம் -34 *

32

இமிழ்கடல் சூழ்கின்ற பேருலகின் முதலாம்

இருந்தமிழ் வழக்கெல்லையில்

இறைவனைத் திருவிளை யாடல்செய் வித்தவன்

இன்னருட் புனன்முகந்தே

அமிழ்தொழுக் கேய்ப்பமெய் யந்தணர்கள் மன்பதை யடங்கலும் ஓதியுய்ய

அளித்துதவு கொடையாய நற்பண் சுமந்தன

வருந்திரு முறைப்பாக்களைக்

2

குமிழ்நகை யிலங்கவெழில் அம்பலத் துடையவன்

கூத்தாடு பொலிவுகண்டு

குழைகின்ற நெஞ்சொடுங் குயிலனைய குரலொடுங் கொவ்வைவாய் இனிதுபாடுந்

தமிழிசைக் கேற்பநற் றாளமிடு செங்கையால் சப்பாணி கொட்டியருளே!

தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி கொட்டியருளே!

குறிப்புரை :

1. பண் "பண்சுமந்த பாடல்” திருவாசகம்.

2. சுமந்தன

சுமந்தனவாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/281&oldid=1595170" இலிருந்து மீள்விக்கப்பட்டது