உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

33

1மூவா யிரந்தமிழ்ப் பாவா யிலங்குபெரு முன்னுறு தமிழ்த்தோன்றியம்

3மூன்றாவ தாம்படிக் கேன்றதிரு முறையென 4முனைவரார் தலைமேற்கொளுந் தேவார்ந்த மந்திரந் தந்ததிரு மூலனின் திருமரபில் வருமொருவனாம்

தீம்புனற் காவிரியின் ஓங்குகரை மன்னும் திருக்கொட்டை யூரின்மேவும்

5மாவோகி யாயவர சானந்த முனிவனின் மணிமலர்த் தாள்பணிந்து

மற்றவன் தந்தருள் மந்திரம் பெற்றொளிர் மாசிலாக் குருமாமணி

தாவாப் பெரும்புகழ் நிலைகொண்ட தலைமகன் சப்பாணி கொட்டியருளே!

தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி கொட்டியருளே!

257

குறிப்புரை :

மூலன் உரைசெய்த மூவாயிரம் பா

திருமந்திரம்.

1. மூவாயிரந்தமிழ் 2. தோன்றியம் ஆகமம். திருமந்திரம் தமிழாகமம் என்பது வழக்கு. மூன்றாம்படி - (1) பற்று (2) தொண்டு (3) ஓகம் (4) அறிவு என்னும் படிநிலைகள் நான்கனுள் மூன்றாவதாகிய ஓகம். இந்நான்கினையும் வட நூலார் (1) சரியை (2) கிரியை (3) யோகம் (4) ஞானம் என்ப.

3.

4. முனைவர்

5. மாவோகி

வினையின் நீங்கி விளங்கிய அறிவினர்.

திருமூலரின் குருமரபில் வந்தவர் திருக்கொட்டையூர் அரசானந்த முனிவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/282&oldid=1595171" இலிருந்து மீள்விக்கப்பட்டது