உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

மறைமலையம் -34 *

34

நான்மறைகள் என்றே பழந்தமிழ் நூல்கள் தாம் நவிலுவ பெரும்பான்மையும்

நல்லதமிழ் நூல்களே யல்லாது பின்னாள் நடப்பித்த வடமொழியினில்

மேன்மை யிலாச் சிறிய தெய்வங்கள் தம்மையும் வெறியாட்டு வேள்விதமையும்

மிக்கபூ தங்கள்'குடி 2விடியல்பிற வற்றையும் மெத்திவழி பாடுசெய்யும்

பான்மையின் இருக்குமுதல் நான்மறைகள் அலவெனப் பாங்குற 3எடுத்துரைப்போய் பழந்தமி ழிலக்கியப் பயிற்சியிற் றமிழர்தம் படி நிலை வளர்ச்சிகண்டு

சான்றவ னெனக்கேட் டுவந்ததாய் ஆயினோய்4

சப்பாணி கொட்டியருளே!

தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி கொட்டியருளே!

குறிப்புரை :

1. குடி - சோமப் பூண்டின் சாறு.

2. விடியல் வைகறை உருவகம் (உஷா) இவை தெய்வமாக

வழுத்தப்பட்டுள்ளன.

3. எடுத்துரைப்போய் - பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை எனும் அடிகளார் நூலின் முன்னுரை காண்க!

4. ஆயினோய் “ஈன்ற பொழுதில்” - திருக்குறள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/283&oldid=1595172" இலிருந்து மீள்விக்கப்பட்டது