உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

35

கம்பனின் மகனாய அம்பிகா பதிபெருங் காவலன் பெற்றமகளாங்

கன்னியம ராவதிக் கதைகள்வர லாறெலாங்

கண்டுமிக நுணுகியாய்ந்து

1செம்புலப் பெயலென்ன ஆங்கவர்கள் தாங்கொண்ட சீரார்ந்த காதல்நிலையும்

சீர்த்தநற் பழகுதமிழ் வளமையும் மற்றுநின் செம்மைமிகு புலமைநலமும்

எம்பால் விளங்கிமிகு பேருவகை செய்யஉயர் இனியமுத் தமிழ்சிறக்க

எழிலார்ந்த நாடகஞ் செய்தருள் மாவயவ எங்கணும் பசுமைபூத்துச்

2சம்பா வளங்கெழுமு பொன்னிசூழ் நன்னாட சப்பாணி கொட்டியருளே!

தண்டலை சூழ்ந்திலகு வண்டமிழ்ப் பெருநாட சப்பாணி கொட்டியருளே!

குறிப்புரை :

1. செம்புலப்... - "செம்புலப் பெயல்நீர் போல” - குறுந்தொகை. 2. சம்பா நெற்பயிர் - நிலத்துக்கணியென்ப நெல்லுங் கரும்பும்.

259

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/284&oldid=1595173" இலிருந்து மீள்விக்கப்பட்டது