உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

263

39

இளமையிற் கொண்டான் இறப்பக் கைம்பெண்

எனுநிலை தாமெய்தி

எல்லையில் அல்லல் அழுந்துறு மகளிர்

இடர்வாய் மீண்டேறி உளமிசை வாரை மறுமணங் கூடி

ஒழுக்கத் துடன்வாழ

உள்ள மிரங்கித் திருந்துக வென்றே உரைத்தரு ளியதன்றி

இளமை மகளிரை முதியர் மணக்கும் இழிநிலை மாற்றியவர்க் (கு)

ஏற்புறு கைம்பெண் மகளிரை வரைகென இசையுங் கருத்துலகம் கொளநல மிக்க அறிவுரை தந்தோய்

கொட்டுக சப்பாணி!

கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!

குறிப்புரை :

இளம்பருவக் கைம்பெண்கள் மறுமணங்கூட

ஆவன செய்ய வேண்டுமெனவும், முதிய ஆடவர் மணக்க விரும்பின் கைம்பெண்களையே மணக்கத் தூண்ட வேண்டுமெனவும் அடிகளார் தமது சீர்திருத்தக் குறிப்புக்களில் கூறியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/288&oldid=1595177" இலிருந்து மீள்விக்கப்பட்டது