உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

5. முத்தப் பருவம்

41

தெண்டிரைப் பொன்னிசூழ் தண்டலையில் இனமுற்ற

தேன்வண்டு பண்மிழற்றித்

தெளிதமிழ்ப் பெருநலங் காட்டுமுயர் 'வேளூரில்

2சித்தர் அமுதக்கரையினில்

ஒண்டொடித் 3தையலொடு 4வேம்படியின் நீழலில்

உறுபிணிகள் தீர்ந்துவையம்

உய்வுகொள மேற்கெழுந் தருளியுள உவமையில் உயர்5மருத் துவனையுன்னிக் கொண்டபிணி தீர்ந்துநீ தொண்டுசெய வாழ்வுறு குறிப்புணர்ந் துள்ளமுருகிக்

கொழுமலர்ச் செய்யவடி இணைபோற்றி யிருநிலங் கொள்ளவொரு பதிகவடிவில் எண்டிசை யரும்புகழ் தண்டமிழ்ப் "பாவோதும் எழில்வாயின் முத்தமருளே!

ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் முத்தமருளே!

265

குறிப்புரை :

1. வேளூர் புள்ளிருக்கு வேளூர் வினை தீர்த்தான் கோயில் (வைத்தீசுவரன் கோயில்).

2. சித்தர் அமுதம் - ஷ திருக்கோயிலில் உள்ள திருக்குளம் சித்தாமிர்தம் என்னும் பெயருடையது.

3. தையல்

4. வேம்பு

தையல் நாயகி. ஷெ யூர் அம்மன்.

ஷ யூர்த் திருக்கோயில் மரம் (தல விருட்சம்).

5. மருத்துவன் மருத்துவப் பெருமான் - இறைவன்.

6. பா

மறைமலையடிகளார் இயற்றிய புள்ளிருக்கு வேளூர்ப் பதிகம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/290&oldid=1595179" இலிருந்து மீள்விக்கப்பட்டது