உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

மறைமலையம் -34 *

42

செவ்வையாய்ச் சொற்பொருள் உணர்ந்துநெஞ் சுருகிநற்

செம்பொருளை இனிதுபோற்றிச்

சிறப்புமிகு வழிபாடு செய்துயர மாட்டாது

சிறுமையே யுறுவேமெனத்

'தவ்வளைக் கூச்சலாய்ச் செவியுறப் பெற்றவர்

தமக்கன்றியும் விள்ளுவார்

தமக்குமொரு பொருளுணர்வு தாராத வடமொழித்

தகவில்வழி பாடுசெய்தே

எவ்வளவு பயனுமறி யாததமிழ் மக்கட்(கு)

இனிக்குங் 2கரும்பிருக்க

இன்னாத வேம்புநுகர் கின்றமை விளக்கி நன்(கு)

ஏலுமறி வுரைவழங்கி

எவ்வமில் இருந்தமிழில் இறைவனடி போற்றுநின் எழில்வாயின் முத்தமருளே!

ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் முத்தமருளே!

குறிப்புரை :

1. தவ்வளை

தவளை.

2. கரும்பிருக்க... "கரும்பிருக்க வேம்பு நுகர்வார் போல” என்பது அடிகளார் தமது திருவாசக விரிவுரையில் கூறியுள்ள உவமை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/291&oldid=1595180" இலிருந்து மீள்விக்கப்பட்டது