உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

43

நீற்றவன் திருவருள் போற்றுநல் லடியவர்

நிறைதமிழ் ஆய்வுவல்லார்

நெடுநாள் நினைந்துசெய் பேரரு முயற்சியால் நெடியபுனல் கெடிலமென்னும்

ஆற்றினுக் கணிசெயும் 1பாதிரிப் புலியூரில் அப்பர்2கரை யேறவிட்டார்

ஆங்கவர் திருமுன்பில் ஓங்குமா நாடென அணிதிரண் டினிதிருப்ப

வீற்றுநற் றலைவனாய் வியன்பழஞ் செந்நெறி விளங்கிநீ டூழிவாழ

வேண்டிய திருத்தங்கள் தீரமா னித்தாண்டு வீங்குபுகழ் 3ஞானிமகிழ

ஏற்றநிறை பேருரை யாற்றியருள் செய்யுநின் எழில்வாயின் முத்தமருளே!

ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் முத்தமருளே!

267

குறிப்புரை :

1. பாதிரிப்புலியூர்

2. கரையேறவிட்டார்

3.

இறைவன் பெயர்.

ஞானி

திருப்பாதிரிப்புலியூர்.

கரையேறவிட்ட பெருமான் என்பது ஷெ யூரில்

திருப்பெருந்திரு ஞானியாரடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/292&oldid=1595181" இலிருந்து மீள்விக்கப்பட்டது