உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

மறைமலையம் -34 *

44

முந்தைநாள் ஆலால சுந்தரன் கயிலையில்

முறைபிறழ்ந் திருமாதரை

முன்னிய பிழைக்கந்த கன்னியர்கள் தம்மொடும் மும்மைநீர் சூழுலகினில்

வந்ததாய் ஆரூரர் முற்பிறவி 1வரலாறு

வரைந்துளது பொய்யாமென

வண்டமிழ்ச் சேக்கிழார் விண்டிலர் இதுவென வையகம் மிகவியந்து

பொந்திகை யுறப்பல விளக்கங்கள் தருகின்ற பொருவரிய பேரறிவினால்

போற்றுமா தொண்டர்தம் வரலாற்று மாட்சிப் புலப்படுத் துந்திறத்தால்

எந்தமை ஆட்கொள்ளும் முந்துதமிழ் சிந்துநின்

எழில்வாயின் முத்தமருளே!

ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் முத்தமருளே!

குறிப்புரை :

1. வரலாறு

சுந்தரரின் முற்பிறவி வரலாறு முதலியன இடைச்செருகல் என்பதனை அடிகளார் பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் என்னும் தமது நூலில் விளக்கியுள்ளார்.

ஷை நூல் திருப்பாதிரிப்புலியூர் மாநாட்டுத் தலைமையுரையும் அதன் மேலெழுந்த தடைகட்கு விடையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/293&oldid=1595182" இலிருந்து மீள்விக்கப்பட்டது