உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

45

ஊனையுரு கச்செயுங் 'கேட்டாரு மறியாத ஒண்டமிழ்ப் பாவெடுத்தே

உலகுளம் உவந்திட இலகுதமிழ் மாமழை உரையான் விளக்கிமற்றும்

ஆனைமுகன் ஆறுமுகன் வருபிறப் பிவையென அறிவிலியர் தாங்கேட்பினும்

அறவெறுப் புறநின்ற தரமிலாக் கதைகளின் அளவிலாப் பொல்லாங்கெலாம்

பானையுறு தயிரினிற் புக்கமத் தேயெனப் பாறுறச் செய்துஞாலம்

பார்க்கநிற் கின்றவத் திருவுருப் பொருளெலாம் பாங்குற விளக்கியருளி

ஏனையவ ருந்தமிழ் வேணவா கொள்விக்கும் எழில்வாயின் முத்தமருளே!

ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் முத்தமருளே!

269

குறிப்புரை :

1. கேட்டாரு---

-

"கேட்டாரு மறியாதான்” என்பது திருவாசகப் பாடல்.

கடவுள் நிலைக்கு மாறுபட்ட கொள்கைகள் சைவம் ஆகா (திருச்சி மாநாட்டுத் தலைமைப் பொழிவு நூல்).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/294&oldid=1595183" இலிருந்து மீள்விக்கப்பட்டது