உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

47

(வேறு)

பலபல வாயிரம் 1மீன்நாப்பண்

பான்மதி யொளிரும் பான்மையென பார்புகழ் அறிஞர் பேரவையில்

பைந்தமிழ் வளமும் அயன்மொழியால்

நலமிக வீழ்ந்து நலிந்தமையும்

நாநலம் உடையாய் உரைசெய்ய நாவுக் கரசர் சலங்காட்டி

நடுவே புலவர் வினவுதலும்

சலசல வென்னும் ஒலிக்குறியால்

2சலமும் நீரின் தமிழ்ப்பெயரே

சாற்றும் நல்வாய் இல்லாதார்

ஜலமென் றனரென்(று) 3உரைசெய்தோய்

இலகுறு தமிழின் நலங்காட்டும்

எழில்வாய் முத்தந் தருகவே! எறிதிரை நாகைக் கடல்முத்தே எந்தாய் முத்தந் தருகவே!

271

குறிப்புரை :

1. LOGOT விண்மீன்.

2. சலம்... - ‘சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்” என்பது திருநாவுக்கரசர் தேவாரம்.

3. உரைசெய்தோய் - கரந்தை தமிழ்க் கழகத்தில் அடிகளார் தலைமையுரை

நிகழ்த்துங்கால் சலம் பூவொடு என்னும் பாடலை என்னும் பாடலை நினைவூட்டி அவையிலிருந்து பண்டித மணி வினவினராகச் சலசலவென ஓடுதலின் ஒலிக்குறிப்பால் சலம் என்பது தமிழ்ச்சொல்லே என்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/296&oldid=1595185" இலிருந்து மீள்விக்கப்பட்டது