உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

மறைமலையம் -34 *

48

பார்புகழ் தமிழில் நாடகநூல்

பனுவல்கள் மற்றும் வரலாறு

பற்பல பிறவும் செய்ததொடும்

பைந்தமி ழிற்பெயர் பெயர்கொண்டு சீர்மிகு சென்னை மாநகரின்

செவ்விய கிறித்துக் கல்லூரி

செந்தமிழ்த் துறையாள் பெரியோனாய்ச் சிறப்புறு பரிதி மாற்கலைஞன் 1தேர்வான் உயிர்த்தொடர் குற்றுகரம் தெரிக்கென நின்னை வினவுதலும் 2தெரியா(து) என்ற மொழிவிடையாய்த் தெரியச் சொல்லி வியப்பித்தோய்

ஏர்வளர் தமிழின் நலங்காட்டும் எழில்வாய் முத்தந் தருகவே! எறிதிரை நாகைக் கடல்முத்தே எந்தாய் முத்தந் தருகவே!

குறிப்புரை :

1. தேர்வான்... கிறித்தவக் கல்லூரிப் பணி நேர்முகத்தேர்வுக்குச் சென்றகாலைப் பரிதிமாற் கலைஞர் உயிர்த்தொடர் குற்றியலுகரம் ஒன்று கூறுமாறு வினவலும் அடிகளார் "தெரியாது” என்றார் என்ப.

2. தெரியா(து)

_

தெரியாது என்பது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/297&oldid=1595186" இலிருந்து மீள்விக்கப்பட்டது