உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

49

1மாற்றந் 2தெரியா(து) எனக்கேட்டு மன்னு தமிழ்ப்பே ராசிரியன் மாண்புடை யாய்நின் திறமெண்ணி மகிழ்ச்சி மிக்கூர்ந் திருந்தக்கால்

ஆற்றல் மிக்கோன் அவன்பால்நீ 4அரியன மூன்று வினவுதலும் ஆங்கவன் அமைதி பூண்டு5பினை அண்ணல் நினையே பகர்கென்னத்

தேற்றம் உடைய தீந்தமிழில்

திண்ணிய நின்றன் நுண்ணறிவும் தெரிய வுரைக்கும் பெருநலனும் தேரச் செப்பித் தெளிவித்தோய் ஏற்றம் பொலியும் தமிழ்தருநின் எழில்வாய் முத்தந் தருகவே! எறிதிரை நாகைக் கடல் முத்தே எந்தாய் முத்தந் தருகவே!

273

குறிப்புரை :

1. மாற்றம் – மறுமொழி.

2. தெரியா(து) - 'தெரியாது' என்பது விடை.

3.

பேராசிரியன் - பேராசிரியர் பரிதிமாற்கலைஞர்.

4. அரியன... - பரிதிமாற் கலைஞரை நோக்கி அடிகளார் மூன்றுவினாக்கள் எழுப்பினர் எனவும் அவற்றுக்கு அடிகளாரையே விடை சொல்லுமாறு கலைஞர் கூறினார் எனவும் கூறுப.

5. பினை- பின்னை என்பதன் இடைக்குறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/298&oldid=1595187" இலிருந்து மீள்விக்கப்பட்டது