உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் -34 *

50

'சாந்துணை யும்நனி கற்கவெனுஞ் 2சான்றோன் மெய்ம்மொழி வழிநின்று

சற்றும் பிழையா தினிதொழுகிச்

சாற்றும் ஞாலத் தாய்மொழியாம்

தீந்தமிழ் மொழியும் ஆரியமும்

தேயம் பலவும் நனிபரவித்

திகழும் ஆங்கிலத் தொடுபிறவும்

திறவோர் முயற்சியின் அவைநன்றே

ஏந்திய பற்பல துறைகொண்ட

ஏற்றம் மிக்க நூல்களெலாம் இரவும் பகலும் வேட்கையொடும்

இனிது பயின்று வழிகாட்டும்

ஏந்தல் எந்தாய் செம்பவள

எழில்வாய் முத்தந் தருகவே! எறிதிரை நாகைக் கடல் முத்தே எந்தாய் முத்தந் தருகவே!

குறிப்புரை :

1. சாந்துணை... - 'யாதானும் நாடாமால்' என்னுந் திருக்குறள்.

2. சான்றோன்

திருவள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/299&oldid=1595188" இலிருந்து மீள்விக்கப்பட்டது