உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் இறைகுருவனார்

-

275

6. வாரானைப்பருவம்

51

கருமுற்றி இளநடை தாங்கிவரு கரு'மேதி 2கைதைப் பொழில் நீழல்வாய்க்

கடன்மேற் செலும்பரத வக்குழாத் தின்னிசையில் கண்படுத் தினிதுதுயிலும்

திருவொற்றி யூர்க்கோயில் கொண்டெழுந் தருளியெஞ் சிறுமைக ளெலாந்தொலைத்துத் தீராத பேரின்பம் நல்குநற் காட்சிதரு 3தென்றமிழ் வாணனென்னும்

முருகற்கு முத்தமிழ்க் கழகநூல் பிறவெலாம்

முறையிற் பயின்றுயர்ந்த

முதுக்குறை வையகங் காணுமா றெழிலார்ந்த

4மும்மணிக் கோவைபுனையும்

பெருவெற்றி கொள்தமிழில் பொருவற்ற நாநலம் பெறுமகன் வந்தருள்கவே! பேசுதமி ழுக்குற்ற மாசிரித் தொளிர்வித்த பெருமையன் வந்தருள்கவே!

குறிப்புரை :

1. மேதி எருமை. 2. கைதை தாழை. 3. தென்றமிழ்வாணன் 4. மும்மணிக்கோவை அடிகள் இயற்றியது.

முருகன் தமிழ்க்கடவுள் என்பது வழக்கு. திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை

இப் பாடலில் திணைமயக்கம் அமைந்துள்ளமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/300&oldid=1595189" இலிருந்து மீள்விக்கப்பட்டது