உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் -34 *

52

பெருஞாலம் நல்வாழ்வு பெற்றுச் சிறந்திடும் பெரிதுயர் நெறியுணர்ந்து

பெட்புகொடு பின்பற்றி யொழுகியுய்ந் திடவரிய பேரின்ப நிலையுற்றிட

அருமைமிகு செந்தமிழ் பெருநிலம் யாங்கணும் அரைசுவீற் றாட்சிசெய்ய

ஆற்றல்மிகு தமிழினம் மாற்றாரை 1யில்லாமை ஆர்ந்தபுகழ் கொண்டிலங்கப்

பொருளாழ மிக்ககுறு வெண்பாவில் வையகம் போற்றுபொய் யாமொழியெனும்

பொருவிலாப் புகழ்கொண்ட 2திருநூல் வழங்கிடும் புலமையின் 3முதற்பாவலன்

பெருமைமிகு வள்ளுவன் 4யாண்டுமுறை கண்டருள் பெருமகன் வந்தருள்கவே!

பேசுதமி ழுக்குற்ற மாசிரித் தொளிர்வித்த பெருமையன் வந்தருள்கவே!

குறிப்புரை :

1. இல்லாமை இல்லாது. 2. திருநூல் - திருக்குறள்.

3. முதற்பாவலன்

ஒன்று.

முதற்பாவலர் என்பது திருவள்ளுவர் பெயர்களுள்

4. ஆண்டுமுறை - இப்பொழுது நடைமுறையிலுள்ள திருவள்ளுவர் ஆண்டு முறை அடிகளாரால் நிறுவப்பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/301&oldid=1595190" இலிருந்து மீள்விக்கப்பட்டது