உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

53

ஏர்திருத் தஞ்செய்ய வளமல்கு கழனிபொலி ஈர்ந்தமிழ் வழங்குமெல்லை

இருநிலம் பின்பற்றி மேன்மையுறு மாறுநல் ஏற்றமுற் றினிதிலங்கச்

சீர்திருத் தஞ்செய்ய வேண்டியவை தமையெலாம் செம்மையாய்த் தீரவுன்னிச்

சிறப்புமிக முறையே வகுத்தெழுதி ஆங்கவை செயற்பட முயன்றசெம்மல் ஊர்திருத் தஞ்செய் எழுச்சிகொடு வருகுநர் உற்றதம் நிலையைமுன்னம்

ஒழுங்குறச் செய்துகொளல் தலையாய கடனென உலகவர்கள் உணருமாறு

1பேர்திருத் தஞ்செய்து வழிகாட்டி யருள்செயும் பெருமகன் வந்தருள்கவே! பேசுதமி ழுக்குற்ற மாசிரித் தொளிர்வித்த பெருமையன் வந்தருள்கவே!

277

குறிப்புரை :

1. பேர்திருந்தஞ்... - அடிகளார் சுவாமி வேதாசலம் என்னும் தமது பெயரை

மறைமலையடிகள் என்றும், சன்மார்க்க சங்கத்தைப் பொதுநிலைக் கழகமென்றும், ஞான சாகரத்தை அறிவுக்கடல் என்றும் மாற்றி வழிகாட்டினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/302&oldid=1595191" இலிருந்து மீள்விக்கப்பட்டது