உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் -34 *

54

கருத்துப் புரட்சியான் உலகந் திருத்துவார்

கருதுவ வெளிப்படுத்தும்

கருவியா வனபேச் செழுத்தொழுக் கம்மெனக் கைக்கொள்ளு 1மூன்றனுள்ளும்

பொருத்தமிகு நடுவதே ஏனைய விரண்டினும் பொருவரும் பயன்நல்கலின்

புகலப் பெரும்பணிக் கச்சகம் தம்முடைப் பொறுப்பினில் இயங்கல்நன்றால்

திருத்தமுறு திருமுருகன் அச்சகம் நிறுவிநற் றீந்தமிழில் ஆங்கிலத்தில்

தெருளார்ந்த நூல்களும் 2மாதிகையும் எழிலார்ந்து திகழுமா றச்சியற்றி

வருத்தந் தொலைந்துயாம் இன்புற வழங்கியருள்

வள்ளலெஞ் செம்மல்வருக! வளருந் தமிழ்ப்பயிர் வாட்டம் தவிர்த்திட வந்தகரு முகில்வருகவே!

குறிப்புரை :

1. மூன்றனுள்ளும்... யாதேனுமொரு கருத்தை வெளிப்படுத்துதற்கு வாயில்களான பேச்சு, எழுத்து, நடப்பு என்னும் மூன்றுமாம். இவற்றுள்

பேச்சும் நடப்பும் காலமும் இடமும் கடந்து பயன்தரமாட்டா. எனவே எழுத்தொன்றே பெரும் பயன் நல்குவதாம்.

2. மாதிகை – மாதந்தொறும் வரும் வெளியீடு (monthly).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/303&oldid=1595192" இலிருந்து மீள்விக்கப்பட்டது