உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

279

55

மதிநுட்ப மிகவுடைய காளிதா சன்றந்த

மன்னுபுகழ் சாகுந்தலை

மாட்சிமை தெரிந்துயாம் மனவளங் கெழுமிட

மாத்தமிழ் நிலைப்படுத்தும்

அதிகாரி யாய் வந்த பெருமநின் 1மொழிபெயர்ப்(பு)

ஆக்கமும் 2ஆராய்ச்சியும்

அருந்தமிழ்க் கொள்கையில் திருந்துசெந் நெறியினில் அனையவாம் பிறவற்றினில்

எதிர்நிலைக் காஞ்சியா சாரியன் றன்னையும்

ஈர்த்தலின் நின்றிருப்பேர்

இலங்குநற் 3பரிசில் தருதிட்டம் வகுத்தவன் இனிதே நடத்துவண்ணம்

எதிரிலாப் புகழ் கொண்ட ஏற்றமிகு பெற்றியார் ஏந்தற் பிரான் வருகவே!

என்றுமுள தென்றமிழ் வென்றுயர நன்றுசெய் எங்கள் பெரு மான்வருகவே!

குறிப்புரை :

அடிகளார் நூல்கள்.

1. மொழிபெயர்ப்பு சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பு 2. ஆராய்ச்சி சாகுந்தல நாடக ஆராய்ச்சி 3. பரிசில்... ஷ நூல்களின் மாட்சிமை யுணர்ந்து காஞ்சி காமகோடி

பீடத்துத் தலைவர் சங்கராச்சாரியார் "மறைமலை அடிகள் நினைவு சாகுந்தல நாடகப் பரிசுத்திட்டம்” என்னும் அறக்கட்டளை அமைத்துள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/304&oldid=1595193" இலிருந்து மீள்விக்கப்பட்டது