உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280

மறைமலையம் -34 *

56

(வேறு)

இருநில முழுதுங் கைக்கொள்ளும்

இயல்பின வாய்நற் பொதுமையவாய் என்றும் பொருந்தும் நிலையினவாய் இயற்கையி னொன்றிய செயற்கையவாய்

அருமையு மெளிமையு மொருங்குடைய

ஆற்றல் சான்ற நடையினவாய் அறநெறி யருளும் பண்பினவாய்

அழகுயர் தமிழின் முதனூலாய்ப் பெருமையி னோங்கிய வள்ளுவனும் பெண்ணை வருமெய் கண்டானும் 1பிலிற்றிய நெஞ்ச மலரின்றேன்

பெற்றிமை வையஞ் சுவைத்துணர அருமையின் 2ஆராய்ந் திருநூல்கள் அளித்தோன் வருக வருகவே! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அத்தன் வருக வருகவே!

குறிப்புரை :

1. பிலிற்றல் - சிந்துதல்.

2. ஆராய்ந் திருநூல்கள் – திருக்குறள் ஆராய்ச்சி

அடிகளார்

சிவஞான போத ஆராய்ச்சி

நூல்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/305&oldid=1595194" இலிருந்து மீள்விக்கப்பட்டது