உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

57

அடிமைப் பெண்டிர் மக்களென

ஆர்பொரு ளுடைய சூத்திரரென் (று) ஐயம் புக்க அயலவர்கள்

அஞ்சா துரைத்த இழிமொழியை

அடிமைப் பட்ட பெருந்தமிழர்

அறியா மையாற் சிறப்பென்றே

ஆங்கவர் மகிழத் தொண்டுபல

அடங்கா மகிழ்வொடும் செய்துழலும்

1அடிமை நாளுறு தியினறியா

அருந்தமிழ் மக்கள் நாகரிகம்

அனைத்துல கத்தும் மேன்மையதென்(று)

ஆராய்ந் தெழுதி வெற்றியுடன்

அடிமை நிலையைச் சிதைவித்த

அத்தன் வருக வருகவே!

அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அண்ணல் வருக வருகவே!

குறிப்புரை :

1. அடிமை நாள் - தொடக்கக்காலம்.

281

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/306&oldid=1595195" இலிருந்து மீள்விக்கப்பட்டது