உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

59

வரையறை கொண்ட நல்வாழ்வும் வழுவா தொழுகும் பெற்றிமையும் வையகம் நன்றே பின்பற்ற

வழிகாட் டியருள் பெருமைகொள அரைநூற் றாண்டின் மேலாக

அன்றா டத்துக் குறிப்புகளை ஆங்கில மொழியில் தவறாதே அழகுற வெழுதிய சிறப்புடையாய் புரைபா டில்லாப் பெருவாழ்வும்

பொருந்தார் தம்மைப் புறங்கண்டு பொலியும் வாகை தோள்கொண்டு பொருவில் புகழும் கொண்டுதனி அரையன் எனவே தமிழ் காத்த அண்ணல் வருக வருகவே! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அத்தன் வருக வருகவே!

283

குறிப்புரை :

1. ஆங்கில மொழியில்.... - அடிகளார் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக

இடைவிடாது சீரிய ஆங்கிலத்தில் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/308&oldid=1595197" இலிருந்து மீள்விக்கப்பட்டது