உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284

மறைமலையம் -34 *

60

1முளைமந் திரமென மெய்யறிவர்

மொழியும் திருமொழி மாட்சிமையும் முன்னறு திருவைந் தெழுத் தென்னும் முதன்மை 2மறைமொழி நுண்பொருளும் இளையாத் தமிழில் எழிலுறநன்(கு)

ஏற்புற வெழுதிப் புன்மையினேம் ஏழைமை யொழிய அருள் செய்தோய் எந்தை பெருமான் வந்தருள்க! வளையாக் கொள்கைச் செம்மாப்பும் வையம் பணியும் பெருமிதமும் வைப்பா யுற்ற தனிமேன்மை வள்ளால் வருக என்றென்றும்

3அளையாத் தவமிகு திருவுடைய அண்ணல் வருக வருகவே! அருந்தமிழ் ஆளும் பெருந்தகையெம் அத்தன் வருக வருகவே!

குறிப்புரை :

1. முளைமந்திரம்

பிரணவம் என்ப.

ஓங்காரம். இதனை வடநூலார் பீசமந்திரம்

2. மறைமொழி - 'மறைமொழிதானே மந்திரமென்ப - தொல்.

3. அளையாமை

குற்றமின்மை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/309&oldid=1595198" இலிருந்து மீள்விக்கப்பட்டது