உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

  • பிள்ளைத்தமிழ் இறைகுருவனார்

7. அம்புலிப்பருவம்

61

திருமேனி ஒளிமிக் கிலங்குமுயர் பொலிவினால் தீம்பொழிவு செய்வண்மையால்

திறமிக்க புலவோர் வியந்துபாப் புனைகின்ற திருவுடைப் பெருநலத்தால்

ஒருதுளிக் காலமுந் தவறாத நடைமுறை உடைமையால் உலகமெல்லாம்

ஒள்ளிய மதிச்செல்வன் என்றினிது பேசிநல் உவகையொடு பயனுகர்தலால்

பெருமானெம் ஐயனின் றனைப் பொருவல் ஒருதலை பெரிதும் விருப்பு கொண்டு

பேருலக முழுவதுந் தொழுதேத்தி நன்கினிது பேசப் பெறுந்தமிழினால்

அருகினில் வருகெனத் திருவாய் மலர்ந்தனன்

அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்பயில் நாகை கிழானொடும் அம்புலீயாட வாவே!

285

குறிப்புரை :

இப்பாடல் ஒப்பு (சமம்) என்னும் வாயின் முறை பற்றி அம்புலிக்கு அடிகளாரை உவமித்துப் பாடியது.

1. பொருவல்

ஒத்திருத்தல்.

JJ

2. அரிய... - “கற்றார் பயில் நாகை அப்பர் தேவாரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/310&oldid=1595199" இலிருந்து மீள்விக்கப்பட்டது