உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286

மறைமலையம் -34 *

62

மண்ணிலடி 1தோயாத வியல்பினை எமையாளும் மன்னவனும் அன்னனேயால்

மாந்தர்கள் 2மதிக்கின்ற பெருமையை ஈங்கிவன் மாட்சிநீ அறியாயலை

கண்ணுதற் செஞ்சடை யவன்கொள விருந்தனை கண்மணியின் நிலையுமதுவே

கனிவோடு நள்ளிரவின் இனிதியங் குவையிவன் கருதுபணி 3செய்யுமக்கால்

எண்ணவரு வரிசையின் உலாவருவை எங்கள்தம் ஏந்தல் உலாக்கண்டுளை

இருந்தவாற் றாலிவன் றனைநிகர்க் கின்றனை இனியவாய் மழலைபேசி

அண்மையில் வருமாறு நண்புற வழைத்தனன்

அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!

குறிப்புரை :

இப்பாடலும் ஒப்பு (சமம்) என்னும் வாயில் முறைபற்றி அம்புலியை அடிகளார்க்கு உவமித்துப் பாடியது.

1. தோயாத... - அடிகளார் பாதங்கள் நிலத்தில் தோய்தலில.

2. மதித்தல்

அம்புலியை அடிப்படையாகக் கொண்டே நாள் எண்ணிக்கையும் திங்கள் வரையறையும் செய்யப் பெறுகின்றன.

3. செய்யுமக்கால்... அடிகளார் நள்ளிரவில் விழித்திருந்து படித்தல் எழுதுதல் முதலியன செய்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/311&oldid=1595200" இலிருந்து மீள்விக்கப்பட்டது