உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

63

திருவருட் பேரொளியர் வள்ளலார் பாக்களைத் தீண்டிய ‘மருக்களைந்தான்

தென்றமிழர் “சூத்திரர்” என்ற விழி பெயரையுந் தீர்த்தனன் இவைமட்டுமோ

பெருமைமிகு செந்தமிழ் கொடியவர்கள் விரகினால் பெறுகளங் கந்துடைத்துப்

2பிறங்குவித் தானிவன் பெருமைகள் நாவினாற் பேசப் புகின்வளருமால்

இருளென்ன நின்பால் இலங்குறு களங்கமும் எளிதினின் இரித்துமுற்றும்

எழிலுற விளங்குமா றொளிர்விப்பன் இனிதுகாண் எவ்வுயிர்க் கும்மிரங்கும்

அருள்நெஞ்சம் உடையனெம் பெருமகன் அழைத்தனன் அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!

குறிப்புரை :

இப்பாடல் உதவி (தானம்) என்னும் வாயின் முறை பற்றியது.

1. மரு

குற்றம் (உலகவர் கூறியது).

அடிகளார் மருட்பா என்றாரை மறுத்து அருட்பா என நாட்டினார். ஒளிரச்செய்தல்.

2. பிறங்குவித்தல்

287

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/312&oldid=1595201" இலிருந்து மீள்விக்கப்பட்டது