உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288

மறைமலையம் -34 *

64

தன்பெருக் கங்கொண்ட கல்வியறி வாண்மையால் தகுதிமிகு கலைநலத்தால்

தாளாண்மை யின்வந்த 1பட்டறிவு வன்மையால் தன்னே ரிலாச்செவ்வியன்

துன்புறுத் துங்கொடிய நோய்நொடிகள் யாவையும் தூய்மை மருந்தால்அறி

துயில்படுத் தரியநன் முறைமையால் வேரோடு தொலைத்துநல மாக்குவன்காண்

நின்வருத் தஞ்செயும் பிணிபற்றி வையகம் நிகழ்த்துமுரை கேளாதிலேம்

நிரம்பவும் பேறுடைய நினையழைத் தானீண்டு

2நிமையத்தின் ஓடிவருதி

அன்பருக் கெளியனாய் உதவுவான் இவனொடும் அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!

குறிப்புரை :

இப்பாடலும் உதவி (தானம்) என்னும் வாயின் முறை பற்றியது.

1. பட்டறிவு பட்டறிவு என்பது வடநூலாரால் அநுபவம் எனப்படுவது. 2. நிமையம் – நிமைய மாவது சிறுபொருள் கன்னல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/313&oldid=1595202" இலிருந்து மீள்விக்கப்பட்டது