உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்

65

1வறிதே சுரக்குமோர் அமுதவூற் றுடையையால் வளர்ந்துநிறை வெய்தியக்கால்

வையகங் கொள்ளுமா றினிதே வழங்கலும் வடிந்தொழிய மீண்டுமுன்போல்

நெறியே நிறைதலும் நன்றே வழங்கலும் 2நிரப்புறப் பெறுதலுமென

நீணெடுங் காலநின் ஒப்புரவு கண்டனம் நின்மனக் கவலையொழிக

சிறிதே இவன்றருந் தமிழமுது கொளினூழி செல்லினும் வற்றாதுகாண்

செலவிடச் செலவிடப் பெரிதும் வளர்ந்திடு சிறப்புடைத் தென்பதறிதி

அறிவிலா வெளியேமும் ஆட்கொளப் பெற்றனம் அம்புலீ யாடவாவே!

அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!

குறிப்புரை :

இப்பாடல் பிரிப்பு (பேதம்) என்னும் வாயின் முறைபற்றியது.

1. வறிதே - 'வறிது சிறிதாகும்' - தொல்.

2. நிரப்பு

வறுமை.

289

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/314&oldid=1595203" இலிருந்து மீள்விக்கப்பட்டது