உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மறைமலையம் - 34 - 34 *

தேர்ச்சி: 1957 மார்ச் பி.ஏ., தேர்வில் சென்னை மாநிலத்திலேயே தமிழில் முதல் மாணவராகத் தேறிப் போப் தங்கப்பதக்கம் பரிசு பெற்றார். 1963 இல் எம்.ஏ., தேர்வில் தனிப்பட எழுதி மாநில இரண்டாம் பரிசு பெற்றார்.

சிறப்புப் பட்டங்கள்:

1) 1966 இல் கவிஞரின் முப்பதாம் பிறந்த நாளன்று குன்றக்குடியில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களால் “பல்துறைச் செந்நாப் பாவலர்” என்ற பட்டம் வழங்கப் பெற்றார்.

2) 24 - 4- 72 அன்று பறம்புமலைப் பாரி விழாவில் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களால் "கவிஞர்கோ” என்னும் பட்டம் வழங்கப் பெற்றார். தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் பொன்னாடை போர்த்தல். தமிழகத் திரைப்படப் பிரிவு திரைப்படம் எடுத்த நிகழ்ச்சி.

3) மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிற் பொற்கிழிக் காவியப் போட்டியில் "பாண்டிமாதேவி" காவியம் எழுதி முதற்பரிசு பெற்றமையின் 1973 இல் 'பொற்கிழிக் கவிஞர்’ ஆதல். தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் ரூ.1001 - பொற்கிழி வழங்கல் - டாக்டர் மு.வ.தலைமை தாங்கி ஆசி கூறல் - தமிழகத் திரைப்படம் வெளியீடு.

புத்தக வெளியீடும் பொன்னாடையும்:

இதுவரை 60 தமிழ் நூல்கள் பல்துறைபற்றி வெளியிடல், தந்தை, கட்டுரை, நாடகம், பயணம், இலக்கியத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு நூல்கள், 5000 -க்கும் மேற்பட்ட கவிதைகள் (13 தொகுப்புகளாக) வெளிவந்துள்ளன.

முதல் கவிதைத் தொகுப்பினை தாகுப்பினை 1961 இல் அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார். டாக்டர் ராஜா சர். முத்தையாச் செட்டியார் பொன்னாடை போர்த்தினார். பேராசிரியர் டாக்டர். சி. சிதம்பரநாதன், கி.வா.ஜகந்நாதன், தமிழ்வாணன் முதலியோர் பாராட்டினர். 1965 இல் இரண்டாம் கவிதைத் தொகுப்பினைத் தலைவர் திரு. காமராசர் வெளியிட்டார். சபாநாயகர் திரு. செல்லபாண்டியன் தலைமை தாங்கினார். திரு. கிருஷ்ணசாமி நாயுடு, கவிஞர் கண்ணதாசன், சின்ன அண்ணாமலை, கொத்த மங்கலம் சுப்பு, பேராசிரியர்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/31&oldid=1594920" இலிருந்து மீள்விக்கப்பட்டது