உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

7

டாக்டர் ந.சஞ்சீவி, திரைப்பட அதிபர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார், அகிலன் ஆகியோர் பாராட்டினர். தொழிலதிபர் பி.எஸ்.எஸ். சோமசுந்தரம் செட்டியார் பொன்னாடை போர்த்தினார்.

15-10-66 இல் முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களின் எழுபதாம் பிறந்தநாள் விழாக் கவியரங்கில் மதுரையில் கவிஞர் சோமசுந்தரன் தலைமை தாங்கினார். பக்தவத்சலம் பொன்னாடை போர்த்தினார். 1965இல் கருமுத்து தி. சுந்தரம் செட்டியார் “தியாகக் குடும்பம்” நாடக நூலை வெளியிட்டுப் பொன்னாடை போர்த்தினார். டாக்டர் மொஅதுரை அரங்கனார் பாராட்டினார்.

21 -11 -1974இல் சென்னையில் “பாண்டிமாதேவி” நூல் வளியீடு. நீதிபதி கிருஷ்ணசாமி நாயுடு தலைமை தாங்கிப் பொன்னாடை போர்த்தினார். திரு.ம.பொ.சி நூலை வெளியிட்டார். பேராசிரியர் மறைதிருநாவுக்கரசு, நாரண துரைக்கண்ணன்,டாக்டர் சி.பாலசுப்பிரமணியன், சிலம்பொலி செல்லப்பன், இளமுருகு பொற்செல்வி மற்றும் பலர் பாராட்டல்.

சுற்றுப்பயணம்: இந்தியா முழுவதும் மும்முறை பயணம் செய்துள்ளார். இலங்கை, நேபாளம், பிரிட்டன்,பிரான்சு ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம், ஹாலந்து, ஆஸ்திரியா, வாட்டிகன் முதலிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு இடங்களில் உரையாற்றினார். பம்பாய்த் தமிழ்ச் சங்கம், டில்லித் தமிழ்ச் சங்கத்திலும் சொற்பொழிவு.

திறமை: கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர், சிவபக்தர்.

பணி: 1959 முதல் நான்காண்டுகள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்: 1963 முதல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்.1967 முதல் தனிப்பயிற்சிக் கல்லூரி முதல்வர். 1974 முதல் கதாகாலட்சேபம் நாடெங்கும் செய்து வருகிறார்.

கதாகாலட்சேபம்: 1974 மே மாதம் புதுவயல் ஸ்ரீகைலாச விநாயகர் கோயிலில் வள்ளல் உயர் திரு.யெ.மு.விசுவநாதன் செட்டியார் தலைமையில் "பாண்டிமாதேவி மங்கையர்க்கரசி” பற்றிக் கதாகலாட்சேபம் அரங்கேற்றம்.

பிறகு 1-6-76 அன்று “மகாபாரதம்” தொடர் கதா காலட்சேபம் அரங்கேற்றம்,

இருமுறையும்

வள்ளல்

உயர்திரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/32&oldid=1594921" இலிருந்து மீள்விக்கப்பட்டது