உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8

மறைமலையம் - 34 × - *

யெ.மு.விசுவநாதன் செட்டியார் அவர்கள் பொன்னாடை போர்த்தல்.

பொதுப்பணி: 1963 இல் இராமநாதபுர மாவட்டத் தமிழாசிரியர் கழகத்தைத் தொடங்கினார். 5 ஆண்டுகள் அதன் தலைவர். அதற்கு முன் தஞ்சை மாவட்ட ஆசிரியர் கழகச் செயலர். இராமநாதபுர மாவட்ட ஆசிரியர் கழகச் செயலர். 1971 முதல் இராமநாதபுரம் மாவட்ட அருள்நெறி மன்றத் தலைவர். 1973 இல் எட்டயபுர “உலகத் தமிழ்ச் சங்க” அமைப்புக் கூட்டத் தலைவர்.

பிரதிநிதி: “யுனெஸ்கோ" நடத்திய குழந்தை இலக்கிய ஆய்வரங்கில் தமிழ் மொழிப் பிரதிநிதியாக 1965 இல் சென்னைக் கருத்தரங்கில் 15 நாட்கள் பங்கு பெற்றார். 1959 இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் “புல்பிரைட்” பேராசிரியர் டாக்டர் நட்லி நடத்திய ஆங்கிலக் கருத்தரங்கில் பங்குபெற்றார். 31-1-1974 இல் இலங்கை யாழ்ப்பாணத்தில் தொடங்கிய நான்காம் உலகத் தமிழ் மாநாட்டுப் பிரதிநிதியாக அழைக்கப்பெற்று "இருபதாம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதை” என்னும் தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார்.

வானொலி: இவரது நிகழ்ச்சிகளை திருச்சி, சென்னை,

இலங்கை வானொலிகள் ஒலிபரப்பி உள்ளன.

ஆங்கிலத்தில்: இவரது கவிதைகள் சில ஆங்கிலத்தில் Lyrical Cavalcade என்ற நூலாக வெளிவந்து ஐரோப்பா முழுதும் பரவி நல்ல புகழை ஈட்டியுள்ளது.

பொன்முடி பதிப்பகம்: 3-6-1963 3-6-1963 இல் பொன்முடி

பதிப்பகத்தைத் தொடங்கி அதன் மூலம் கவிஞர் தனது நூல்களை வெளியிட்டு வருகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/33&oldid=1594922" இலிருந்து மீள்விக்கப்பட்டது