உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

1. காப்புப் பருவம் விநாயகர்

பூமேவு தேவர்கள் பாமேவு நாவலர் போற்றிய வணங்கி நித்தம்

பூசித்து மலரடி யாசித்து நிற்கின்ற புண்ணியா! புகழ்வி நாயகா!

நாமேவு கலைமகள் நந்தமிழ்த் தலைமகள்

நதியெனப் பொங்கி நின்ற

நாயகப் புலவனாம் தாயகத் தலைவனாம்

நம்பியை இனிது காக்க!

காமேவு கனிரசம் நாமேவு பனிரசம்

கட்டுரை ஈந்த செல்வம்

கடலலை நாதமும் கதியருள் வேதமும்

கண்மணி ஈந்த கீதம்!

மாமேவு செந்நெலும் மனமேவு கன்னலும்

1)

மறைமலை ஈந்த சொத்து!

மாநிலம் புரந்திடும் விநாயகா! மறைமலை மன்னனை இனிது காக்க!

புறப்பொருட் கனிரசமும் அகப்பொருள் இதழ்ரசமும் தரும் இன்பத்தை மறைமலை அடிகளின் கட்டுரைகளைப் பயில்வதன் மூலம் பெறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/34&oldid=1594923" இலிருந்து மீள்விக்கப்பட்டது