உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

மறைமலையம் -34 *

-

முருகன்

அலைபாயும் உள்ளங்கள் கலைபாயும் இல்லங்கள்

அனைத்திலும் நடன மாடி

அகத்துறை படித்தவா! புறத்துறை முடித்தவா!

ஆனந்த வள்ளி கணவா!

மலைமாது தெய்வானை குறமாது கலைவள்ளி

மார்பிலே தோய்ந்த செல்வா!

மணமாலை இரண்டோடு மறைமாலை, "ஓம்" ஒன்று

மகிழ்வுடன் தந்த முருகா!

சிலையாகி நின்றாலும் மலையாகி நின்றாலும்

செந்தமிழ்ப் பாட லென்றால்

சிந்துரக் கன்னமும் குறமகள் அன்னமும் சிவக்கவே வந்து நிற்பாய்!

மலையினைப் பின்னரும் மறையினை முன்னரும் மதியுடன் அமைத்த பேரன்

மறைமலை அடிகளை மால்மரு காநிதம்

2) மகிழ்வுடன் இனிது காக்க!

மணமாலை இரண்டு வள்ளி தெய்வானை ஆகிய இருவர்க்கும் முருகன் சூட்டிய இரண்டு மணமாலைகள். மறைமாலை = 'ஓம்” என்னும் மறைக்குப் பொருள் கூறியதால் அதனையே ஒரு மாலையாக உலகிற்குத் தந்தவன் முருகன். பேரன் = மறைமலை என்னும் பேரை உடையவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/35&oldid=1594924" இலிருந்து மீள்விக்கப்பட்டது