உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

11

சிவபெருமான்

தழல்எனும் மேனியும் தழல்வளர் காணியும் தனக்கெனக் கொண்ட தேவா!

தகுதியில் உயர்ந்தவை உலகினுக் கீந்தவா! தாழ்புலித் தோலுடைக் கொற்றவா!

விழலினை ஏற்றிடும் ஏற்றினைப் போற்றிடும் வேதமே சூழ்ந்த தேவா!

வியனுல கத்திலே பயனிலை சுகத்திலே வெற்றிடம் கொண்ட வீரா!

அழலெனக் கொதித்திட அருவியாய்க் குதித்திட ஆனந்த நடனம் உற்றாய்!

அங்கையில் செங்கனல் மங்கையொரு பாகனே! ஆதியும் அந்தம் இல்லோய்!

மழலையே பேசிடும் தனித்தமிழ்க் குழந்தையாம் மறைமலை இனிது காக்க!

மதிவளர் ஒளியென மறைமலை அடிகளாம்

3) மன்னனை இனிது காக்க!

தழல்வளர் காணி = நெருப்பு வளரும் சுடுகாடு.

உலகினுக் கீந்தவா =விலை உயர்ந்த பொருள்களை எல்லாம் உலகத்தாருக்கு அளித்துவிட்டு எளிய பொருள்களான பாம்பு, புலித்தோல், சுடுகாடு, உருத்திராக்கம், எருக்கம்பூ

நீறு,

ஆகியவற்றை ஏந்தியவன் சிவபெருமான்.

விழல் = புல், வைக்கோல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/36&oldid=1594925" இலிருந்து மீள்விக்கப்பட்டது