உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் -34 *

-

மீனாட்சியம்மை

கூடலில் தேவியாய்ப் பாடலில் ஆவியாய்க்

குடிஎழுந் திருக்கும் அம்மா!

கொற்றவர் வணங்கினார் பற்றிலார் வணங்கினார்

கோயிலோ வானை முட்டப்

பாடலும் புராணமும் ஆடலும் வேதமும்

பாதமே போற்றி நிற்கப்

பழமறை எத்தனை புதுமறை எத்தனை

பார்த்து நீ கேட்டு நின்றாய்.

ஆடவர் ஆண்டிட மாதவர் வேண்டிட

அங்கயற் கண்ணி அம்மா!

அருள்நலப் பரவிடப் பொருள்நலம் விரவிட

அருந்தமிழ் அமுது தந்தாய்!

மாடமா மதுரையில் கூடல்மீ னாட்சியே! மறைமலை இனிது காக்க!

மாத்தமிழ் போற்றிடப் பூத்தகண் மணியிவன்

4) மாண்புடன் இனிது காக்க!

கூடல் = மதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/37&oldid=1594926" இலிருந்து மீள்விக்கப்பட்டது