உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

13

கண்ணன்

வெண்ணெயே உண்டவா! மண்ணையே கண்டவா

வேதமே மீட்ட தேவா!

வீரமே ஆர்த்திடப் பாரமே தீர்த்திட

வேதமும் பொருளு மானாய்!

பண்ணினால் பாடினும் கண்ணினால் காணினும்

பழவினை தீர்த்து வைப்பாய்!

பாரதப் பாடலும் இராகவக் காவியம் பண்டுநீ கேட்ட தோடு

மண்ணில் நா லாயிரத் திவ்வியமாம் பிரபந்தம் மாதவா! கேட்டு நின்றாய்!

மாண்புகழ்ப் பாரதிப் பாட்டிலும் சேவகப் பாத்திரம் ஆகி நின்றாய்!

அண்ணலாய் நின்றுநம் அடிகளாய் வென்றபல் லாவர ஐய னையே

அருந்தமிழ்த் தேர்வலா! நறுந்துழாய் மார்பகா!

5) ஆசையாய் இனிது காக்க!

வேதமே மீட்ட = வேதங்களைக் கடலுக்குள் இருந்து மீட்டு வந்தவர் திருமால்.

வேதமும் பொருளும் = திருமால்தான் வேதமாகவும் அதன் பொருளாகவும் விளங்குபவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/38&oldid=1594927" இலிருந்து மீள்விக்கப்பட்டது