உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் -34 * -

நடராசர்

பதஞ்சலி களிப்புற வியாக்கிரர் பனிப்புறப்

பண்டுநீ ஆடி நின்றாய்.

பாடலில் மாணிக்க வாசகர் பாவையும்

பதிகமாய் எழுதி நின்றாய்.

பதமெலாம் உன்னுடைப் பாதமே சரணமாய்ப் படிந்திடப் தேடு தய்யா!

பார்த்திபர் பொன்னிடக் கீர்த்திகள் பெற்றதும்

பழமறை நாத! உன்னால்.

சதமெனச் சிதம்பரம் கதியெனக் கிடந்தவர் சரித்திரம் கண்ட கோடி!

சாற்றிடும் அடியவர் போற்றிடும் குழாத்திலே

சார்ந்தநற் சைவ னாகி

மதம்களி கூரவே நிதம்உனைப் பரவிடும்

மகனைநீ இனிது காக்க!

மல்லையில் வாசனே! தில்லைநட ராசனே!

6) மறைமலை இனிது காக்க!

பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் காணச் சிதம்பரத்தில்

நடராசர் நடனம் ஆடுகிறார்.

பனிப்புற = கண்ணில்

மகிழ்ச்சிக் கண்ணீர் துளிர்க்க

மாணிக்கவாசகரின் திருவாசகத்தை நடராசர் எழுதினார்.

பதம் = வார்த்தைகள் எல்லாம் நடராசரின் பாதத்தையே தேடுகின்றன.

பார்த்திபர்

=

சோழ மன்னர்கள் பொன்னம்பலத்தில்

பொற்கூரை வேய்ந்து புகழ் பெற்றனர்.

சைவன் = மறைமலை அடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/39&oldid=1594928" இலிருந்து மீள்விக்கப்பட்டது