உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

15

கலைமகள்

அறுபத்து நால்கலை உருவத்தில் பூமியில் அவதரித் திருக்கும் அம்மா!

அர்ச்சனை நாவலர் கர்ச்சனைப் பாவலர்

ஆயிரம் கோடி தந்தாய்!

கருவத்தில் உள்ளவர் உருவத்தை மாந்தர்கள் காணவே ஆட்டி வைத்தாய்!

காட்சிகள் மாறிட மாட்சிகள் மாறிடக்

கதைகளை மாற்று கின்றாய்.

அருவத்தில் தேவிநீ உருவத்தில் காவியம்

அகத்திலே இலக்க ணம்நீ!

அருங்கலை எத்தனை அத்தனை கோடியும்

அன்னையே வாழும் உன்னால்!

பருவத்தில் குழந்தையாய்ப் படைப்பிலே மேதையாய்ப் பரிணமித் திருக்கும் ஐயன்

பார்புகழ் மறைமலைக் குழவியைக் கலைமகள்

7) பார்வையால் இனிது காக்க!

கருவம் = ஆணவம் மிக்க அறிவாளிகளைக் கலைமகள்

ஆட்டிப் படைப்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/40&oldid=1594929" இலிருந்து மீள்விக்கப்பட்டது