உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

-

மறைமலையம் - 34 *

தமிழ்த்தாய்

தென்பொதிகைச் சந்தனமே! மண்குளிரும் செந்தமிழே!

தேடரிய மூத்த செல்வி!

தேசங்கள் பலவாக வாசங்கள் செய்கின்ற

தேனருவித் தெய்வ தம்மே!

விண்ணவர்கள் ஏடெழுத வேந்தரெலாம் நாடெழுத

வெற்றியுடன் வீற்றி ருந்தாய்!

வேலேந்தி நின்றவர்கள் கோலேந்தி வென்றவர்கள் விளையாடிப் பாட்டி சைக்க

மண்குளிரும் தேவாரம் மனம்குளிரும் வாசகங்கள்

மலைமலையாய்ப் பெற்ற தாயே!

மைந்தனெனும் ஒருசிறுவன் மறைமலையாம் ஒரு துருவன் மாண்புடனே தோன்றி உள்ளான்

கண்குளிரக் கண்டவளே! காப்பியங்கள் கொண்டவளே!

கடவுளுக்கும் மூத்த தாயே!

கலைவளர்க்க வந்ததமிழ் மறைமலையை எப்பொழுதும்

8) கனிவுடனே இனிது காக்க!

பலதேசங்களில் தமிழ் பேசப்படுகிறது.

தேவர்கள் தமிழுக்குப் பல ஏடுகளைத் தந்தார்கள்.

திருஞானசம்பந்தர் போன்ற பெருமக்கள் அவதாரம் செய்து ஏடெழுதினார்கள். அரசர்கள் பலர் பிறநாடுகள் வென்று தமிழுக்கு நாடெழுதினார்கள்.

வேலேந்திய வீரர்களும், செங்கோல் ஏந்திய அரசர்களும் கவிதையினை விளையாட்டுப் போலப் பாடும் புலமை பெற்றிருந்தார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/41&oldid=1594930" இலிருந்து மீள்விக்கப்பட்டது