உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்

17

ஆங்கிலச் செவிலித் தாய்

வெள்ளமெனப் பூமேவி வெல்லமென நாமேவி

வீரமுடன் உலகை ஆண்டு

வீதியெலாம் கொடிஏந்த சாதியெலாம் மடிஏந்த விளையாடி வந்த தாயே!

கள்ளமிலா ஷேக்ஸ்பியரும் மில்டனுடன் பெர்னாட்ஷா கவிவாணர் கீட்சும் எல்லாம்

கடலலையாய்ப் பாடிவர மெக்காலே கூடிவரக் கலைக்கூடம் ஏறி வந்தாய்!

தள்ளரிய பிரிட்டனையே தாயகமாய்க் கொண்டாலும் தாரணியைச் சேர்த்து வைத்தாய்!

தமிழுக்குப் பலபுதுமை விஞ்ஞானம் தந்தவளே தமிழர்க்குச் செவிலித் தாயே!

பள்ளியிலே பயிலாமல் ஷெல்லியெலாம் பயின்றினிய

9)

பக்குவங்கள் பெற்ற மேதை

பாராளும் மறைமலையைப் பாராண்ட ஆங்கிலமே பாசமுடன் இனிது காக்க!

பூவுலகில் வெள்ளம்போல் பாய்ந்து, நாக்கில் வெல்லம் போல் தித்தித்து உலகை ஆண்டவள் ஆங்கிலம்.

எல்லாச் சாதியினரும் ஆங்கிலம் கற்றனர்.

ஷேக்ஸ்பியர் முதலிய கவிஞர்கள் ஆங்கிலத்தை வளர்க்க, மெக்காலே இந்தியாவில் ஆங்கிலக் கல்விக்குப் பாடத்திட்டம் அமைத்தார்.

மறைமலை அடிகள் பள்ளியில் படிக்காவிட்டாலும் தானே ஆங்கிலம் படித்துப் புலமை பெற்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/42&oldid=1594931" இலிருந்து மீள்விக்கப்பட்டது