உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் -34 *

-

திருவள்ளுவர்

முப்பாலைத் தந்துலகின் அப்பாலும் கீர்த்தியினை

மூட்டியதால் தமிழ ருக்கு

மூவேந்தர் செய்யாத, முகில்கூடப் பெய்யாத

மூச்சான குறளை ஈந்தே

எப்பாரும் எப்பதமும் எங்களது குறளெனவே

ஏற்றமுடன் போற்றி சைக்க

இன்பமொரு கோடிவரத் துன்பமெலாம் ஓடிவிட

எந்தமிழ்த்தாய் முறுவ லிக்க,

செப்பாத ஈரடியால் ஒப்பாரும் இல்லாமல்

செந்தமிழில் புதுமை யாகச்

சீர்மணக்க வையமெலாம் பேர்மணக்க வாழ்வியலைச்

சித்திரித்த வள்ளு வாநீ

தப்பேதும் இல்லாத தனித்தமிழில் சொல்லாத

தத்துவங்கள் சொல்ல வந்த

தலைமகனாம் நமதுதமிழ்க் கலைமகனாம் மறைமலையைத்

10) தாரணியில் இனிது காக்க!

செப்பாத = வள்ளுவருக்கு முன்பு யாரும்

=

குறள் வெண்பாப் பாடியதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/43&oldid=1594932" இலிருந்து மீள்விக்கப்பட்டது