உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

2. செங்கீரைப் பருவம்

தேன்கதலிச் சுவைகனியத் தீந்தமிழின் அவைகனியத் தேசமெலாம் பேசு தற்குத்

தித்திக்கும் வள்ளுவனும் இளங்கோவும் கம்பனுமே திரண்டொருபால் வந்த தேபோல்

வான்மழையாய் வந்தவனே! வாகையெலாம் தந்தவனே! வற்றாத தமிழின் ஊற்றே!

வயலேதும் இல்லாமல் பெயலேதும் இல்லாமல் வார்த்தைஎனும் விளைவு தந்தாய்!

ஊன்பொலியத் தமிழ்மாந்தர் உளம்பொலியத் தீங்குரலால்

ஊக்கமுடன் இனிது பாடி

உலகாள வந்தவனே! பலநூல்கள் தந்தவனே!

உயர்வான பாதை சொன்னோய்!

சேண்மொழியும் தன்மொழிபோல் ஆண்மையுடன் கற்றுணர்ந்தோய்!

செங்கீரை ஆடி அரு

ருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே!

1) செங்கீரை ஆடி அருளே!

கதலி = வாழை. விளைவு = பல நூல்கள் எழுதினார். மறைமலை அடிகள் இனிமையாகப் பாடுவார்.

ஆங்கிலம், வடமொழி ஆகியவற்றிலும் மறைமலை அடிகள்

புலமை பெற்றிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/44&oldid=1594933" இலிருந்து மீள்விக்கப்பட்டது