உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் - 34

ஆடவரில் நிலைமகனே! ஆத்திகரில் தலைமகனே! அலைகடலாம் இல்ல றத்தில்

அன்பான முத்தமிழ்போல் இன்பமொரு முத்தாரம் ஆசையெலாம் நிறைவு செய்யக்

காடவர்கோன் நந்திதமிழ்ப் பாடலெலாம் முந்திவரக்

காலத்தால் துறவு பூண்டு

கடைச்சங்கப் புலவோரும் இடைச்சங்கப் புலவோரும் கைகட்டி வந்து நிற்க

நாடவர்கள் பாராட்ட நாவலர்கள் தேரோட்ட

நாத்திகரும் போற்றி சைக்க

நற்றமிழைச் செந்தமிழர் முற்றமெலாம் சிந்திவர

நடைபோட்டு வந்த புலவா!

சேடனையும் வென்றவனே! செந்தமிழில் நின்றவனே! செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே!

2) செங்கீரை ஆடி அருளே!

சங்கத்தார் பாட்டினையும் வங்கத்தார் ஏட்டினையும்

சால்புடனே கற்ற செல்வா!

சைவத்தில் ஆழ்ந்தவர்கள் தெய்வத்தில் தோய்ந்தவர்கள்

சங்கரனை விட்ட போது

திங்களணி முடிசூடும் தெய்வதமே விடிவெள்ளி

தேசத்திற் கென்று ரைத்துச்

முத்தாரம் = மறைமலை அடிகள் மூன்று மனைவியரைத் திருமணம் செய்து கொண்டவர்.

பல்லவ மன்னன் நந்தியின் நந்திக் கலம்பகம் படித்ததால் அவனைப்போல் தமிழுக்குத் தொண்டு புரியத் துறவுபூண்டார் மறைமலை அடிகள்.

சேடன் = ஆதி சேடன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/45&oldid=1594934" இலிருந்து மீள்விக்கப்பட்டது