உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் சென்னைமுதல் குமரிவரை சைவமத மாநாடு திசைஎலாம் ஏற்ப டுத்திப்

புங்கவர்கள் கூட்டத்தில் புத்தரென அவதரித்துப் புலவோரை ஈர்த்த செல்வா!

புகழுக்கும் வீழாமல் பொருளுக்கும் தாழாமல் புத்தகமே சேர்த்த பொன்னே!

செங்கையினில் நகலேந்தி செந்தமிழின் புகழேந்தி செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே

3) செங்கீரை ஆடி அருளே!

சிட்டாக வானத்தில் எட்டாய உயரத்தில்

சித்தாந்த மொழிகள் பேசித்

தென்னாடும் வடநாடும் தென்மூலை ஈழத்தும்

சிவபக்தி சூழ வைத்துப்

பட்டாடை பூணாமல் கட்டாக வெண்ணீறு

பால்வண்ண மேனி கொள்ளப்

பழகாத பேர்கூட அழகாகப் பாதத்தில்

படிக்காசு வைத்து நிற்கச்

செட்டாக அச்சிட்டுக் கட்டாக உலகெங்கும்

சீராக நூல்ப ரப்பத்

திருமுருகன் அச்சகமும் மறுமுனையில் நூலகமும் திரவியமாய்த் தோற்று வித்தோய்!

21

வங்கத்தார் ஏட்டினையும் = கடல் கடந்த நாடுகளில் உள்ள பல ஏடுகளையும் கற்றவர்.

சைவர்கள் சங்கரனையும் சைவத்தையும் மறந்த போது அடிகள் நாடெங்கும் சைவ மத மாநாடு கூட்டிச் சைவம் தழைக்கச் செய்தார்.

நகல் = தான் எழுதிய நூல்களின் நகல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/46&oldid=1594935" இலிருந்து மீள்விக்கப்பட்டது