உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மறைமலையம் - 34

சிட்டாக வந்தவனே! எட்டாத பங்கனியே!

செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைலையே!

4) செங்கீரை ஆடி அருளே!

சேலாக விளையாடும் நீலாவின் வேண்டுதலால்

செந்தமிழில் கலந்தி ருந்த

சேறான பிறமொழியாம் நீராவி பிரித்ததனால் சீர்கொண்ட அன்ன மாகி

நாலாறு பாதையிலே கோளாறு கொண்டதமிழ் நடைமாற்றிச் செப்ப னிட்டு

நயமான புலவோரும் பயமாகிப் பின்பற்ற நாத்திகமும் தொழுது சுற்றப்

பாலாறு பேச்சாகப் பகையாறு போய்ச்சாகப்

பைந்தமிழைப் பாய்ச்சு தற்குப்

படைகொண்டு வந்தவனே! நடைகண்டு தந்தவனே!

பாமரனும் போற்ற வந்தோய்!

சேலாறு தாமரையாய் நூலாறு மாமறையே!

செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைலையே!

5) செங்கீரை ஆடி அருளே!

திருமுருகன்

அடிகள் ஏற்படுத்தியவை.

நீலா

=

அச்சகமும், அம்பலவாணர்

நூலகமும்

அடிகளின் மகள் நீலாவின்

மறைமலை

தூண்டுதலால் அடிகள் தனித்தமிழ்ப் பற்றுக் கொண்டார்.

சேல் மீன்.மீன்கள் தாமரையில் இளைப்பாறு தலைப்போல நூல்கள் எல்லாம் மறைமலை அடிகளிடம் வந்து தங்கி இளைப்பாறின. “மறைஞ என்பது தமிழ் மறையாகிய திருக்குறளையும் வடமொழி வேதத்தையும் குறிக்கும் நயம் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/47&oldid=1594936" இலிருந்து மீள்விக்கப்பட்டது