உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத்தமிழ்

அரு. சோமசுந்தரன்

சிற்பங்கள் பலகோடி உற்பத்தி ஆனாலும்

சிந்தையிலே கொண்டி ருந்த

சீர்கொண்ட நடராசர் சிலைகொண்டு தினந்தோறும் சேவித்து வாழ்ந்த செல்வா!

அற்பங்கள் திசைமாறும்; கர்ப்பங்கள் தசைமாறும்

ஆனந்தம் துன்ப மாகும்

அண்டங்கள் தூளாகும் பிண்டங்கள் ஆளாகும்

ஆச்சரியம் எளிமை ஆகும்!

கற்பாந்த காலத்தும் பொற்பாதம் மறவாத

காருண்ய மூர்த்தி ஆகிக்

கதையோடு புதினங்கள் உரையோடு பாடல்கள்

கடிதங்கள் தந்த செல்வா.

சிற்பரனை மறவாத அற்புதமே! சிவனருளே!

6)

செங்கீரை ஆடி அருளே.

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே! செங்கீரை ஆடி அருளே!

அந்தத்தின் நிலையறியா சொந்தத்தின் வலையறியா ஆண்டவனை மனத்தி லேற்றி

அம்பலவா! தமிழுக்குச் செம்புலவா! என்றேத்தி அனுதினமும் பூசை செய்து

பந்தத்தின் விடுபட்டுப் பைந்தமிழில் தளைபட்டுப் பகவானைப் பாடி நின்று

பல்லாவ ரத்தினிலே எல்லாம னத்தினிலும் பக்திமழை பொழிய வைத்து

சந்தத்தில் பாடியதும் வந்தித்துக் கூடியதும் சன்மார்க்க சங்க மாகிச்

சாமான்ய மக்கட்கும் ஏமாந்த மக்கட்கும் சரித்திரம் சொன்ன சான்றோய்!

சிந்தித்த பேர்கட்கு வந்திட்ட மறைமலையே!

செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே

7)

செங்கீரை ஆடி அருளே!

பல்லாவரத்தில் அடிகள் சன்மார்க்க சங்கம் அமைத்தார்.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/48&oldid=1594937" இலிருந்து மீள்விக்கப்பட்டது