உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 34.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் -34 *

-

தென்னையிலே நாற்றாகித் தென்றலிலே கீற்றாகித் தீந்தமிழில் ஊற்று மாகித்

தித்திக்கும் மருந்தாகிப் பக்திக்கும் விருந்தாகித் திசையெட்டும் சென்று வென்று

பண்ணையிலே பயிராகிப் பாலாடைத் தயிராகிப் பழந்தமிரில் உயிரு மாகிப்

பண்பட்ட தமிழ்நூல்கள் மண்பட்டுப் போகாமல் பாடமாய் மனத்தி லேற்றித்

திண்ணையிலே இருந்தாலும் தெருஓரம் நடந்தாலும் தீந்தமிழே பரப்பி வந்து

தீயாக அரசியலைக் காயாக ஒதுக்கியதால் தீந்தமிழைக் கற்று ணர்ந்தாய்!

சென்னையிலே தலைமகனே! குமரியிலே நிலைமகனே! செங்கீரை ஆடி அருளே!

சீர்புகழும் துரைமகனே! செகம்புகழும் மறைமலையே!

8) செங்கீரை ஆடி அருளே!

தப்பேந்தி வாழ்ந்தவர்கள் பச்சோந்தி ஆனவர்கள்

தமிழுக்குத் துரோக மாகத்

தடைஅடைத்த போதெல்லாம் மடைஉடைத்த புனலாகிச்

சண்டமா ருதமும் ஆகித்

துப்பாக்கிக் குண்டாகித் துளைபோடும் வண்டாகித்

துயர்நீக்கும் கொண்டல் ஆகித்

தோள்தட்டி வந்தவனே! சூள்கொட்டி வென்றவனே! சோதனைகள் தீர்த்த செல்வா!

நப்பாசை இல்லாமல் தப்பாசை சொல்லாமல்

நாட்டுக்கு வழிகள் காட்டி

மறைமலை அடிகள் தென்னையில் நாற்று; தென்றலில் கீற்று; தீந்தமிழில் ஊற்று; தித்திக்கும் மருந்து; பக்திக்கும் விருந்து; பண்ணையில் பயிர்; பாலாடைத் தயிர்; பழந்தமிழில் உயிர் போன்றவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_34.pdf/49&oldid=1594938" இலிருந்து மீள்விக்கப்பட்டது